தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா சென்ற விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் – கோவில்களில் பிராத்தனை

தீபாவளி பண்டிகையை (நவம்பர் 4) முன்னிட்டு, லிட்டில் இந்தியாவில் ஷாப்பிங் செய்வதற்காக வார இறுதியில் கூட்டம் அலைமோதியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களும் அங்கு சென்றனர். ஊழியர்கள் பலர் இந்த ஆண்டில் முதன்முறையாக அங்கு சென்றுள்ளனர்.

திருச்சி-சிங்கப்பூருக்கு இடையே செல்ல வேண்டுமா? சமீபத்திய விமான அப்டேட்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூக வருகைத் திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து, லிட்டில் இந்தியா மற்றும் கெயிலாங் செராய்க்கு ஊழியர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வாரத்திற்கு 3,000 பேர் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இது முன்பு வழங்கப்பட்ட அனுமதி எண்ணிக்கை 500ஐ விட அதிகமாகும்.

மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கண்காணிக்கவும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு இடைவெளி அதிகாரிகள் அங்கு இருந்தனர்.

இதற்கிடையில், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று ஞாயிற்றுக்கிழமை காமன்வெல்த் டிரைவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றார், அதில் வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்ட தீபாவளி பிரார்த்தனையும் நடைபெற்றது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 36 வயதான ஆனந்த ராஜன், கோயிலில் பிரார்த்தனை செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியை தெரிவித்தார்.

மனிதவள அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் பண்டிகைக் காலத்தில் கோயில் தரிசனத்திற்காக தங்கள் தங்கும் விடுதிகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள், என்றார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: லாரி பயணத்திற்கு மாற்றாக வரும் மினி பேருந்து..