தீப்பற்றிய அறையில் சிக்கிய பூனை… தன் உயிரை பொருட்படுத்தாது பத்திரமாக மீட்ட சிங்கப்பூர் தீயணைப்பு வீரர்கள்

fire woodlands /cat-30-residents-evacuated
SCDF/Facebook

சிங்கப்பூர்: பிளாக் 303 உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 31ல் நேற்று முன்தினம் (மே 8) தீ விபத்து ஏற்பட்டது.

அன்று மதியம் 2:50 மணியளவில் தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக அது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

அதாவது நான்காவது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறையின் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

வெயில் காலம் வந்துருச்சி.. வெப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை – MOM வெளியிட்ட அறிக்கையால் மகிழ்ச்சி

இதனையடுத்து பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து மூன்று பேர் SCDF வருவதற்கு முன்பே பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வீட்டின் அறையில் பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்ட SCDF தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 30 குடியிருப்பாளர்களை போலீசார் வெளியேற்றினர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.