வெயில் காலம் வந்துருச்சி.. வெப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை – MOM வெளியிட்ட அறிக்கையால் மகிழ்ச்சி

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

வெளிநாட்டு ஊழியர்கள் பொதுவாக வேலையிடங்களில் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

இருப்பினும் கூட கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களை எடுத்துக்கொண்டால் கடந்த 5 ஆண்டுகள் அடிப்படையில் ஆண்டுக்கு ஐந்து சம்பவங்கள் அல்லது அதற்கும் குறைவாகவே நடந்துள்ளதாக அவர் கூறினார்.

ஏனெனில், மனிதவள அமைச்சகம் வேலையிடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்தியதே இதற்கு காரணமாக சொல்லலாம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 25 நிறுவனங்கள் மீது MOM அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மே மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் அதிக அளவில் வெப்பம் பதிவாகும், அந்த காலகட்டத்தில் வெப்பத்தின் பாதிப்பு குறித்து MOM அடிக்கடி சோதனை செய்வதாகவும் அவர் கூறினார்.

வெப்பத்தின் பொது ஏற்பட கூடிய பாதிப்பு குறித்தும், நிழல் உள்ளதா அதே போல தேவையான தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வுகளும் இந்த ஆண்டும் இடம்பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.