ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா 2023- பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்திய பக்தர்கள்!

ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா 2023- பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்திய பக்தர்கள்!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற, பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) தீமிதித் திருவிழா நேற்று (நவம்பர் 05) கோலாகலமாக நடைபெற்றது. கோயிலின் தலைமை அர்ச்சகர், சக்தி கரகத்துடன் பூக்குழியில் இறங்கினார். அதைத் தொடர்ந்து, விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க தீமிதி திருவிழா இன்று…

முன்பதிவுச் செய்த பக்தர்கள் மட்டுமே பூக்குழியில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், பூக்குழியை வலம் வந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.

தீமிதித் திருவிழாவில் (Firewalking 2023) சுமார் 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் தீமிதித் திருவிழா களைக்கட்டியுள்ளது. தீமிதித் திருவிழா வரும் நவம்பர் 09- ஆம் தேதியுடன் நிறைவுப் பெறுகிறது.

PM Lee: பொதுத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் பிரதமர் லீ

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.