PM Lee: பொதுத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் பிரதமர் லீ

pm-lee-hand-over-dpm-wong-next-ge
PAP/Facebook

PM Lee:  அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அறிவித்துள்ளார்.

இன்று (நவ.5) நடைபெற்ற மக்கள் செயல் கட்சி (PAP) விருதுகள் மற்றும் மாநாடு கூட்டத்தில் பிரதமர் லீ அதனை கூறினார்.

சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க தீமிதி திருவிழா இன்று…

அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதிக்குப் பிறகு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதற்கு “தயாராக இருப்பதாக லாரன்ஸ் என்னிடம் கூறினார்” என்றும் பிரதமர் லீ கூறியுள்ளார்.

“லாரன்ஸ் மற்றும் அவரது குழுவினர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை” என்றும் அவர் கூறினார்.

“எனவே, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக திரு.லாரன்ஸிடம் பொறுப்பை ஒப்படைக்க உள்ளேன்” என்றார் திரு லீ.

திரு. வோங் 4ஆம் தலைமுறை குழுவின் தலைவராக அங்கீகாரம் பெற்றுள்ளதையும் பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

பிரதமர் லீ மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், திரு.வோங் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்.. வெளிநாட்டு பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பிளாட்