சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்.. வெளிநாட்டு பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பிளாட்

வெளிநாட்டு பணிப்பெண் செய்த காரிய
PHOTO: Shin Min Daily News

வெளிநாட்டு பணிப்பெண் செய்த காரியத்தால் பலர் தூக்கத்தை இழந்து விரக்தியடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

காமன்வெல்த் பிளாட்டில் வேலைபார்க்கும் அந்த பணிப்பெண் பொருட்களை கீழே வீசி, சத்தம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிக்கிய 2 வெளிநாட்டு இளைஞர்கள்

சரியாக சொல்லவேண்டும் என்றால், இந்த பரபரப்பு சம்பவம் பிளாக் 52 காமன்வெல்த் டிரைவில் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

20 வது மாடியில் வசிக்கும் 61 வயதுமிக்க ரஹீம் என்ற வீட்டு உரிமையாளரிடம் அந்த பணிப்பெண் வேலைபார்த்து வருகிறார்.

டிமென்ஷியா என்னும் அறிவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட 76 வயதுமிக்க ரஹீமின் அத்தையும் அங்கு வசிக்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு இவ்வளவு தான் வேகம்.. வந்தது புதிய கட்டுப்பாடு

என்ன நடந்தது?

இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழன் இரவு அந்த பணிப்பெண் தனக்கு தானே பேசியதாக ரஹீம் சீன நாளிதழிடம் கூறினார்.

இதனை அடுத்து, ரஹீம் மற்றும் அவரது அத்தை அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ​​​​அதிகாலை 4 மணியளவில் திடீரென உரத்த அலறல் சத்தம் கேட்டது.

பூட்டிக்கொண்ட பணிப்பெண்

மேலும், அந்த பணிப்பெண் ஒரு அறையில் தன்னை வைத்துப் பூட்டிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதோடு, பொருட்கள் கீழே தூக்கி எறியப்படும் சத்தத்தை நான் கேட்டேன் என்றார் ரஹீம்.

காவல்துறைக்கு தகவல்

பணிப்பெண் ஏதாவது செய்துகொள்வாரோ துன்ற அச்சத்தில் அவர் அவசரமாக காவல்துறையை அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை அடுத்து அங்கு போலீசார் வந்தனர், அதன் பின்னர் பணிப்பெண் கதவைத் திறந்தார்.

போலீசை பார்த்த பணிப்பெண், “என்னை ஏன் அழைத்துச் செல்கிறீர்கள்” என்று சத்தம் போட்டதாக ரஹீம் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதி

உதவி வேண்டி காலை 5.15 மணிக்கு அழைப்பு வந்ததாக கூறிய SCDF, பின்னர் அவரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

மனநல பாதுகாப்பு சட்டம் 2008 இன் பிரிவு 7(1) இன் கீழ் 34 வயதான அந்த பெண் பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

சொந்த நாட்டுக்கு போக வேண்டும்

கடந்த ஆண்டு ஜூலையில் வேலைக்கு சேர்ந்த பணிப்பெண், சில மாதங்களுக்கு முன்பு தாம் இந்தோனேஷியா செல்ல விரும்புவதாகவும், வியாழன் மதியம் தனது உடைமைகளை பேக் செய்ததாகவும் உரிமையாளர் கூறினார்.

ஆனால், ஆவர் 2 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்ததாகவும், இதனால் அவரை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் ரஹீம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 ஆடவர்கள்.. கோவில்களில் உண்டியல் திருட்டு – வீடியோ பார்த்து திருட வந்ததாக தகவல்