சிங்கப்பூரில் குரங்கம்மையால் புதிதாக பாதிக்கப்பட்ட ஆடவர்… மற்றொரு நோயாளியுடன் தொடர்பு – MOH ரிப்போர்ட்

TODAY

சிங்கப்பூரில் நேற்றைய (ஆகஸ்ட் 5) நிலவரப்படி, இருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட அறிவிப்பில், இதில் ஒருவருக்கு முன்பு பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது.

கால்வாயில் கிடந்த ஆடவர் சடலம்… கண்டெடுத்த அதிகாரிகள் – யார் அந்த ஆடவர்?

அதாவது புதிதாக குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட 54 வயதான ஆடவருக்கும், மூன்று நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 33 வயது ஆடவருக்கும் தொடர்பு இருப்பதாக MOH கூறியுள்ளது.

உள்ளூர் அளவில் மற்றொரு நோயாளியிடமிருந்து தொற்று ஏற்படுவது இதுதான் முதன்முறை.

மற்றொரு புதிய நபர், புதிதாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத 25 வயதுமிக்க ஆடவர்.

இதுவரை குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 15 பேர் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஐந்து பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள், மீதமுள்ளவை உள்ளூர் பாதிப்புகள்.

பயங்கர விபத்தில் சிக்கிய லாரி… இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே மரணம்