WWE மல்யுத்த போட்டி: சிங்கப்பூரிலிருந்து களமிறங்கிய முதல் மல்யுத்த வீரர்.!

first Singaporean wrestler WWE
Pic: WWE/SPW FB

அமெரிக்காவின் WWE (World Wrestling Entertainment) மல்யுத்த போட்டியில், முதல் சிங்கப்பூரராக 25 வயது சீன் டான் (Sean Tan) என்பவர் சேர்ந்துள்ளார்.

ஃபுளோரிடாவில் (Florida) மாகாணத்தில் நடத்தப்படும் பயிற்சிகளுக்காக ஆசியாவிலிருந்து சென்ற குழுவில் சீன் டானும் ஒருவர் என WWE அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் முன்னாள் ‘தென் கிழக்காசிய வெற்றியாளர்’ என்னும் பட்டமும் அவரை சேரும்.

சிங்கப்பூரில் சைக்கிளோட்டி மீது காரை ஏற்றி கொன்ற ஆடவர்; 26 வார சிறைத்தண்டனை விதிப்பு.!

WWE கடந்த 2019ஆம் ஆண்டு ஷாங்ஹாயில் சோதனைச் சுற்றுக்களை நடத்தியபோது, சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தைவான், பிலிப்பீன்ஸ், தாய்லந்து ஆகியவற்றிலிருந்து 40 வீரர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூரில் இருந்து சீன் டான் உட்பட மூன்று மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சிங்கப்பூர் மல்யுத்த வீரர் சீன் டான் ட்விட்டரில், தம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்றும், கனவை நினைவாக்க முயல்வோரைத் தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?