சிங்கப்பூரில் உள்ள ‘FLASH COFFEE’ கடைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அறிவிப்பு!

சிங்கப்பூரில் உள்ள 'FLASH COFFEE' கடைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அறிவிப்பு!
Photo: Mothership

 

‘FLASH COFFEE’ என்ற நிறுவனம், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 200 கடைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம், காபி, பப்ஸ் உள்ளிட்டவை தின்பண்டங்களை விற்பனை செய்து வருகிறது.

ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டு பயணி கைது

குறிப்பாக, சிங்கப்பூரில் ஜூரோங் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 11 கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தது. இந்த சூழலில், சிங்கப்பூரில் உள்ள 11 கடைகளின் செயல்பாடுகளை நிறுத்துவதாகவும், அந்த கடைகளை மூடுவதாகவும் ‘FLASH COFFEE’ நிறுவனம் அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி, திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதேபோல், சிங்கப்பூரில் உள்ள கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை; ஊழியர்கள் இனி வேலைக்கு வர தேவையில்லை என அறிவித்துள்ள ‘FLASH COFFEE’ நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள ‘FLASH COFFEE’ அலுவலகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.