சிங்கப்பூரில் பல பகுதிகளில் கனமழை: ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் திடீர் வெள்ளம்.!

Flash flood
Old Photo for illustration (Pic: PUB)

சிங்கப்பூரில் இன்று (06-09-2021) பிற்பகல் ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) பகுதி உட்பட பல பகுதிகளில் கனத்த மழை பெய்தது.

தீவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32-ல் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) தெரிவித்துள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் ஊழியர்கள் உதவி வருவதாக மாலை 4:20 மணியளவில் PUB அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியது. பின்னர், 4:30 மணியளவில் நிலைமை இயல்புக்கு வந்ததாக குறிப்பிட்டது.

கோவிட்-19: எட்டு பேருந்து முனைய குழுமத்துடன் தொடர்புடைய 469 பேருக்கு பாதிப்பு

கனமழை மழை காரணமாக மேலும் சில வட்டாரங்களில் உள்ள வடிகால்கள், கால்வாய்கள் சுமார் 90 விழுக்காடு வரை நிரம்பியுள்ளதாக PUB தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கீழ்க்கண்ட பகுதிகளைத் தவிர்க்குமாறு PUB இன்று மாலை 4 மணியளவில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

• Jln Boon Lay (Bus stop B21339)
• Choa Chu Kang Ave 1/ Teck Wye Lane
• Jurong East St 32 (Blk 311)
• International Rd/ Second Chin Bee Rd
• Chin Bee Rd/ International Rd
• Yuan Ching Rd / Yung Kuang Rd
• Chin Bee OD(Jalan Tukang)
• Wan Lee Rd / Enterprise Rd
• Enterprise Rd
• Commonwealth Lane / Commonwealth Dr

தொழில்துறை கட்டிடத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் கைது – தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்