தொழில்துறை கட்டிடத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் கைது – தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

Singapore Customs

உட்லேண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 6000க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

சிங்கப்பூரில் பகுதிநேர வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு

இதில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையே S$516,490 மற்றும் S$41,430 என ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக இன்று (செப் 6) சுங்கத்துறை தெரிவித்தது.

கடந்த செப். 2ம் தேதி, தொழில்துறை கட்டிடத்தில் சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட லாரியில் பெட்டிகள் மாற்றப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருப்பதாக சந்தேகித்த அதிகாரிகள், அதனை சோதனைக்கு உட்படுத்தினர். பின்னர், லாரியில் தீர்வை செலுத்தப்படாத 1,120 சிகரெட்டு அட்டைப்பெட்டிகளைக் கண்டனர்.

இந்த நடவடிக்கையில், மூன்று சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் ஒரு மலேசியப் பெண் கைது செய்யப்பட்டனர்.

அருகில் உள்ள மற்றொரு லாரியில் சோதனை செய்ததில், 4,928 அட்டைப்பெட்டிகள் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது நபர் மலேசிய-பதிவு செய்யப்பட்ட லாரியின் ஓட்டுநர் ஆவார். தொழில்துறை கட்டிடத்திற்கு சிகரெட்டுகளை கொண்டு செல்ல இந்த லாரி பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு லாரிகள் மற்றும் மலேசிய பதிவு செய்யப்பட்ட லாரி ஆகியவற்றில் மொத்தம் 6,048 அட்டைப்பெட்டிகள் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்காக தேவையான உதவிகளை செய்துவரும் பெண்