வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்காக தேவையான உதவிகளை செய்துவரும் பெண்

Photo: Stomp

தீவு முழுவதும் உள்ள கட்டுமானத் தளங்களைப் பார்வையிட்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான உதவியை பெண் ஒருவர் செய்து வருகிறார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதற்காக, ஸ்டாம்பர் ஸ்னோபெல் என்ற பெண் சிங்கப்பூர் முழுவதும் உள்ள கட்டுமானத் தளங்களுக்கு சென்று வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்

மேலும் அவர், ஊழியர்களுக்கு KN95 முகக்கவசங்கள் மற்றும் பாட்டில் மினரல் வாட்டர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

சிங்கப்பூரில் உள்ள கட்டுமானத் தொழிலில் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 5% உள்ளனர். குறிப்பாக சிங்கப்பூரின் கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களை பெரிதும் நம்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார் அவர்.

Photo: Stomp

அவர்களில் பலர் சிங்கப்பூரில் கடுமையான வேலை மற்றும் வாழ்க்கை சூழல், பாகுபாடு மற்றும் உடல்நல அபாயங்கள் உட்பட பல சவால்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

“நான் கடந்த நான்கு வருடங்களாக இந்த உதவியை செய்து வருகிறேன். இதை நான் வழக்கமாகச் செய்யவில்லை என்றாலும், ஒவ்வொரு காலாண்டிலும் எனக்கு லேசான பணிச்சுமை இருக்கும்போது சிறிது நேரம் ஒதுக்க முயற்சிக்கிறேன்” என்றார் அவர்.

குடியிருப்பில் இறந்து கிடந்த பெண்… துர்நாற்றம் வீசியதை அடுத்து கண்டெடுப்பு