வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (செப். 5) தனது எல்லை நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.

பல்வேறு வகைகளின்கீழ் நாடுகள் மற்றும் பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை, கோவையில் இருந்து “உடான்” திட்டத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க திட்டம்

தற்போது, பிரிவுகள் III மற்றும் IV ஆகிய நாடுகள் மற்றும் பகுதிகளை சேர்ந்தோர் அங்கிருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கிருமித்தொற்றுக்கான சோதனை எடுக்க வேண்டும், அதே நேரத்தில் I மற்றும் II பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் புறப்படுவதற்கு முந்தைய சோதனைகளிலிருந்து விலக்கு பெற்றனர்.

ஆனால், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல், ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் தைவான் ஆகியவை மட்டுமே பிரிவு I என்றும், இந்த இடங்களிலிருந்து வரும் பயணிகள் வருகையின்போது மட்டும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஆடவர் கைது (காணொளி)

இது சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வாசிகளுக்கு பொருந்தும் என சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பிரிவு II, III, IV ஆகியவற்றைச் சேர்ந்த நாடுகள் மற்றும் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் கட்டாய PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இந்தக் கட்டுப்பாடு வரும் செப். 9ஆம் தேதி, இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும்.

முழுமையான விவரம் இதோ:

Source: Ministry of Health

குடியிருப்பில் இறந்து கிடந்த பெண்… துர்நாற்றம் வீசியதை அடுத்து கண்டெடுப்பு