மதுரை, கோவையில் இருந்து “உடான்” திட்டத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க திட்டம்

Coimbatore Flights

சென்னை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக சுமார் 88 ஏக்கர் நிலம் வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் தமிழ்நாடு முதல்வர் திரு ஸ்டாலிலுனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விமான நிலைய விரிவாக்க பணிக்கு இதுவரை 5 ஏக்கர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற ஆடவர் கைது (காணொளி)

மேலும், திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிக்கும் 87 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்கவும் வேண்டியுள்ளார் அவர்.

அதோடு மட்டுமல்லாமல், கோவை, சேலம், தூத்துக்குடி ஆகிய நகரங்களின் விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் இருந்து சிங்கப்பூர், துபாய், கொழும்பு நகரங்களுக்கும், கோவையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், கொழும்பு ஆகிய நகரங்களுக்கும் உடான் திட்டத்தில் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் அவர்.

சிங்கப்பூர் ஆற்றில் நீந்தச் சென்று உயிரிழந்த இந்தியர்