சிங்கப்பூர் ஆற்றில் நீந்தச் சென்று உயிரிழந்த இந்தியர்

சிங்கப்பூர் ஆற்றைக் கடக்கும் சவாலை ஏற்ற 45 வயதான கதிரேசன் என்ற ஆடவர் சென்ற மாதம் வெள்ளிக்கிழமை ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

அவர் போட் கீ பகுதிக்கு அருகில் உள்ள ஆற்று பகுதியில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர் கைது

இணையத்தின் வாயிலாக விடுக்கப்பட்ட சவாலை ஏற்று அவர் நீந்தச் சென்றார் என்று அவரின் நண்பர் கூறியதாக தமிழ்முரசு குறிப்பிட்டுள்ளது.

திரு கதிரேசன், நண்பரின் பேச்சைக் கேட்காமல் இந்த சவாலை ஏற்றது சம்பவத்துக்கு மறுநாள்தான் அவருக்குத் தெரிந்தது.

இதுகுறித்து சென்ற மாதம் வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணிக்கு காவல்துறைக்கும், இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பேரிடர் உதவி மீட்புக் குழு முக்குளிப்பாளர்கள், ஆற்றில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.

பின்னர், கரைக்கு சுமார் 60மீ தொலைவில் ஆற்றின் 3மீ ஆழத்தில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் உயிர் பிரிந்ததை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

சீனர்களின் ஏழாவது மாதம் முடியும் முன் திரு கதிரேசன் ஆற்றைக் கடக்கும்படி சமூக ஊடகத்தில் அவருக்கு சவால் விடுக்கப்பட்டதாக அவரின் நண்பர் கூறியுள்ளார்.

வேலை அனுமதி அட்டைக்கான தகுதி அடிப்படை கடுமையாவதால், வர்த்தகச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு!