ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர் கைது

Zheng Zhangxin

ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் வேலை அனுமதி பெற்ற 46 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (செப். 2) உட்லேண்ட்ஸ் ஸ்ட்ரீட் 31ல் உள்ள அடகுக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அதிக வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்…

அன்று மாலை 5.50 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மாண்டரின் மொழியில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை அடகுக்கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் அவர் காட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதில், “கத்தாதே, எனக்கு பணம் மட்டுமே தேவை. என்னிடம் கத்தி உள்ளது, நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை” என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர், அங்குள்ள ஆண் ஊழியரை கத்தியால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆண் ஊழியர் மிரட்டலுக்கு பயந்து, சுமார் S$24,400 ரொக்க தொகையை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

பணம் மற்றும் S$10,747 மதிப்புள்ள இரண்டு நகைகளுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக ஆடவர் அடையாளம் காணப்பட்டார். அவர் மலேசிய ஊழியர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, 16 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர் திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை சூதாட்டத்தில் பயன்படுத்தியதாக காவல்துறை நம்புவதாக கூறியுள்ளனர், மேலும் அதன் மற்றொரு பகுதியை தனது நண்பர்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தியுள்ளார் அவர்.

அந்த நபர் தனியாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

இன்று (செப். 4) ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்படும்.

வேலை அனுமதி அட்டைக்கான தகுதி அடிப்படை கடுமையாவதால், வர்த்தகச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு!