வேலை அனுமதி அட்டைக்கான தகுதி அடிப்படை கடுமையாவதால், வர்த்தகச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு!

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

உலகநாடுகளின் நிதி உற்பத்தி மையமாகத் திகழும் சிங்கப்பூர், வெளிநாட்டவர்களுடன் வேலைக்காகப் போட்டிபோடும் சிங்கப்பூரர்களிடையே ஏற்படும் சில பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தனக்கான கட்டுப்பாட்டை பின்பற்றி வரும் நடுநிலையான வேலை நியமன வழக்கங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், வர்த்தகச் சங்கங்கள், நிபுணர்கள் ஆகிய பல்வேறு அமைப்புகள் உறுதிப்படுத்திக் கொண்டன.

வெளிநாட்டு ஊழியர்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்: இறுதி செய்யும் பணியில் MOM

இருந்தபோதிலும், வேலைவாய்ப்புத் தொடர்பிலான இந்த புதிய நடைமுறைகளால், வெளிநாட்டினவர்களை சிங்கப்பூருக்குள் நுழையாதப்படி செய்துவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்தினர்.

EP & S – Pass ஆகியவற்றுக்கான தகுதி அடிப்படை கடுமையாக்கப்படும் நிலையில், கூடுதல் சம்பளத்திற்கான வரம்பும் ஏற்படுவதால், வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்குச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, மற்ற நாடுகளின் கொள்கைகளுக்கு ஒத்திருப்பதாக வர்த்தகத் தலைவர்கள் கூறினர்.

இருப்பினும், மேல்நிலைத் திறன்கள் & தொழில்நுட்பங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் சிங்கப்பூரின் மக்கள்தொகையையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

இதில் திறன் அடிப்படையில் ஏற்படக்கூடிய சிலவற்றை சரிசெய்ய வெளிநாட்டினவர்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப வறுமையை போக்க வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்ற 200 தமிழர்கள் மரணம் – ரிப்போர்ட்