வெளிநாட்டு ஊழியர்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்: இறுதி செய்யும் பணியில் MOM

Singapore migrant worker dorms
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டங்களை மனிதவள அமைச்சகம் (MOH) இறுதிசெய்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த ஆண்டு, COVID-19 கிருமித்தொற்று பரவியதைத் தொடர்ந்து அவர்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் தங்களின் வசிப்பிடங்களிலேயே முடக்கப்பட்டு உள்ளனர்.

COVID-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடு உத்தரவின்கீழ் தங்குவிடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தனிமையில் தவிப்பதாகவும், பலவித மனவுளைச்சலுக்கு ஆளாவதாகவும் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

லாரி பயணங்களால் ஆபத்துக்களை சந்திக்கும் ஊழியர்கள்: லாரிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

தங்கும் விடுதிகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக ஏராளமான முயற்சிகளுக்கு திட்டமிடப்பட்ட போதிலும் பாதுகாப்பான நேரம் என்ன என்பதை இறுதிசெய்வது மட்டுமே இனி மீதமுள்ள பணி என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்தித்து வருகிறோம் என்றும், சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித கோணங்களில் திட்டங்களைத் தீட்டுகிறோம் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறிய அவர், ஊழியர்கள் வசிக்கும் சூழலை மேம்படுத்த தங்கும் விடுதிகளுக்கு புத்துயிரூட்டும் முயற்சிகள் அவை என்றார்.

தங்குவிடுதிகளில் போதுமான காற்றோட்டத்தை ஆராய ஏ ஸ்டார் என்னும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து மனிதவள அமைச்சகம் பணியாற்றி வருகிறது என்றார்.

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

மேலும், எதிர்காலத்தில் கிருமித்தொற்றை தடுக்கும் வகையிலான இடைவெளி மற்றும் காற்றோட்டம் போன்றவையும் ஆராயப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை கவனிக்கக்கூடிய வகையில் பல அம்சங்கள் இன்னும் உள்ளன என்பதை COVID-19 நமக்கு உணர்த்தி உள்ளது. அவற்றை நோக்கி அரசு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.