அதிக வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்…

Photo: The Iowa Clinic

COVID-19 தொற்றுச் சூழலில் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதால், தனிமனித வாழக்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையில் சிங்கப்பூர், அளவுக்கு அதிகமாக உழைக்கும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்று வேலையில், நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்வதால், ஊழியர்கள் அதீத மனஅழுத்தம், சோர்வு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உறக்கமின்மை மற்றும் சீரற்ற வாழ்க்கைமுறை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

இவ்வித சிக்கல்கள் அடுத்தக்கட்ட நிலையான உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் மனவியாதி போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

வேலை அனுமதி அட்டைக்கான தகுதி அடிப்படை கடுமையாவதால், வர்த்தகச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு!

அலுவலகப் பணியாளர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் போன்றோர் அதிகப்படியான வேலைப்பளுவிற்கு ஆளாகும்போது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

வேலையிறுதி நாளுக்குள் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடி, அளவுக்கு அதிக தொழிற்ச் சார்ந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளுதல்.

இதனுடன் COVID-19 நெருக்கடி என பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் தொடர்ச்சியாக இருந்தால் ரத்த அழுத்தமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில், பல நாட்கள் அல்லது பல மாதங்கள் நீடித்தால் பெரும் உடல் பிரச்சினையைச் சந்திக்க நேரிடும் என மூத்த இதய நோய் ஆலோசனை நிபுணர் டாக்டர் ரோஹித் குரானா தெரிவித்துள்ளார்.

வாரத்தில் 40 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். குறைவான வேலை நேரம் ஊழியர்களே முன்வந்து சுகாதாரப் பரிசோதனை செய்துக்கொள்ள ஊக்குவித்தல், முறையான மருத்துவ பராமரிப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

சிங்கப்பூர் இருதய அற நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டான் ஹுவெய் சீம் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்தவர்களும் ஊழியர்களின் சுகாதார பராமரிப்பில் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்: இறுதி செய்யும் பணியில் MOM