உணவு விநியோகிக்கும் கேட்டரிங் நிறுவனத்தில் கரப்பான் பூச்சி, எலிகள் நடமாட்டம்

food-caterer-92-food-poisoning
Singapore Food Agency

வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்காமல் இருந்த KG Catering நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் உணவை உண்ட 92 பேர் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் அதிகாரிகள் அந்நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தனர்.

மெரினா பே சாண்ட்ஸின் நுழைவாயிலில் மலம் கழித்த நபர் – யார் அவர்?

அங்கு பராமரிப்பு மோசமாக இருந்ததாகவும், மேலும் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகளும் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அந்நிறுவனம் பல குற்றங்களைச் செய்ததாகக் கண்டறியப்பட்டது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) நேற்று (நவ.1) அன்று தெரிவித்தது.

சோதனையில், வளாகத்தைச் சுற்றி கரப்பான் பூச்சிகள் நடமாடுவதைக் காண முடிந்தது என்றும், வளாகத்தின் தரைப்பகுதி உணவு கழிவுகளால் நிறைந்து காணப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், KG கேட்டரிங் நிறுவனத்திற்கு நேற்று S$6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 20 மற்றும் இந்த ஆண்டு மார்ச் 11 க்கு இடையில், மூன்று தனித்தனி சம்பவங்கள் பற்றிய புகார் வந்ததாக SFA மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியது.

உணவினால் பாதிக்கப்பட்ட யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை.

புதுப்பொலிவுடன் சாங்கி முனையம் 2 முழுவதும் திறப்பு – 4 மாடி டிஜிட்டல் நீர்வீழ்ச்சி, புதிய தோட்டம் உள்ளிட்டவை வேற லெவல்