லிப்ட்டில் இருந்தபோது தீ… பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊழியர்

Food delivery rider died
Singapore Civil Defence Force

சிங்கப்பூர்: தனிநபர் நடமாட்ட சாதனத்தில் (PMD) ஏற்பட்ட தீ காரணமாக உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

20 வயதான அவர், நண்பரைச் சந்திக்கச் செல்லும் வழியில் லிப்டில் தீப்பிடித்ததால் புகையை உள்ளிழுத்தும் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டும் இறந்தார்.

வேலையிடத்தில் மேலும் ஒரு ஊழியர் மரணம்: இயந்திரம் விழுந்து விபத்து – யார் அவர்?

PMD சாதனம் Carousell தளத்தில் இருந்து வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இறந்த ஊழியர் முஹம்மது இர்ஃபான் டேனிஷ் அசார் என்பது கூடுதல் தகவல்.

நேற்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 27) இவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஆண்டு ஜூன் 3 அன்று, இர்ஃபான் தனது PMD சாதனத்துடன் முதல் தளத்தை நோக்கி லிப்ட்டில் செல்லும்போது இந்த சம்பவம் நடந்தது.

PMD இலிருந்து ஒளி வந்தது என்றும், பின்னர் அது வெடித்தது என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

வாள் வீசி ஊழியரை தாக்கிய நபருக்கு பிரம்படி விதிப்பு