வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்: யார் அவர் விசாரணை..

Indian charged for duping insurers for foreign workers injury claims

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் உயரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

கூரையில் மேலே பணியில் ஈடுபட்டிருந்த அவர், சுமார் 4 மீ உயரத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் ஆறாவது ஊழியர் இதுபோன்ற வேலையிட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அவர் 33 வயதான பங்களாதேஷ் நாட்டவர் என்றும், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 2 மார்சிலிங் லேனில் விபத்து நடந்ததாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விபத்தை அடுத்து அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த புதன்கிழமை அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர் பணிபுரிந்த Guan Teck Construction 2000 நிறுவனத்துக்கு பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாக அமைச்சகம் கூறியது.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த அந்நிறுவனத்துக்கு MOM தடை வழங்கியுள்ளது.

மேலும் “முழுமையான விசாரணையின் முடிவைப் பொறுத்து கூடுதலாக நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.