வெளிநாட்டு பணிப்பெண்ணின் சிகிச்சைக்காக நிதி திரட்டிய முதலாளி….நெகிழ வைக்கும் செயல்!

Photo: Nadiah Arinah Mohd Sallehuddin's

சிங்கப்பூரில் உள்ள நதியா அரினா முகமது சலேஹூடின் (Nadiah Arinah Mohd Sallehuddin’s) வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருபவர் சரிப்பா ஃபித்ரியானி (Saripah Fitriyani). அந்த பணிப்பெண் மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மார்ச் 5- ஆம் தேதி அன்று தனக்கு தலைவலி என்று முதலாளி நதியாவிடம் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி….சென்னையில் தரையிறங்கிய விமானம்!

இதையடுத்து, நதியாவும், அவரது தாயாரும், சரிபாவிடம் ஓய்வுவெடுக்குமாறும், நன்றாக உறங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து சமையலறைக்கு சென்று பார்த்த சரிபாவுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. சமையலறையின் தரையின் படுத்தப்படி சரிபா கிடந்துள்ளார். அவரை எழுப்பும் முயற்சியில் நதியா ஈடுபட்டிருந்தார். எனினும், பலன் அளிக்காததால், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளார்.

எனினும், சரிபா கண் விழிக்கவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

‘டிபிஎஸ்’ வங்கியின் இணையதளச் சேவைகள் சீரானது!

அதைத் தொடர்ந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரிப்பாவின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முதலாளி நதியா ‘Go Get Funding’ என்ற இணையப் பக்கத்தின் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தார். அதில், பணிப்பெண்ணின் சிகிச்சை செலவுக்கு மொத்தம் 1,50,000 சிங்கப்பூர் டாலர் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இரண்டே நாட்களில் 70,000 சிங்கப்பூர் டாலர் நன்கொடை கிடைத்துள்ளது.

பல்வேறு தரப்பினரும், பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.