வெளிநாட்டு பணிப்பெண்களை சட்டவிரோதமாக பணியமர்த்தும் முதலாளிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் – MOM

(Photo: Reuters)

தற்போது எச்சரிக்கை வழங்கி தீர்க்கப்பட்ட வெளிநாட்டு பணிப்பெண்களை சட்டவிரோதமாக பணியமர்த்தும் வழக்குகள், எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அபராதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்று மனிதவள அமைச்சகம் வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்து வருவதாக மனிதவள அமைச்சர் கான் சியோ ஹுவாங் (Gan Siow Huang) இன்று (அக். 15) தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள் மீது உள்ள பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள உதவும் என்று திருமதி கான் கூறினார்.

இதையும் படிங்க : ரயில் சேவை மீண்டும் தொடங்கின – தொந்தரவுகளுக்கும் போக்குவரத்து அமைச்சர் வருத்தம்..!

நீ சீன் GRC நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்-ன் (Louis Ng) கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார், அதில் சட்டவிரோதமாக ஒரு பணிப்பெண்ணை பணியில் அமர்த்தும் முதலாளிகளுக்கு அதிகபட்ச அபராதத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சகம் பரிசீலிக்குமா என்று கேட்கப்பட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த வழக்குகள் ஒப்பீட்டளவில் நிலையாக உள்ளதாகவும், இந்த நேரத்தில் அதிகபட்ச தண்டனையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுபோன்று தவறிழைக்கும் முதலாளிகளுக்கு S$10,000 வரை அபராதம் எதிர்கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல அவர்கள் வெளிநாட்டு வீட்டு பெண்களை வேலைக்கு அமர்த்தவும் தடை விதிக்கப்படலாம்.

கடந்த 2017 முதல் 2019 வரை, 16 முதலாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் S$3,300 முதல் S$24,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கொரோனா உயிரிழப்புக்கு நிகராக டெங்கு உயிரிழப்புகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…