ரயில் சேவை மீண்டும் தொடங்கின – தொந்தரவுகளுக்கும் போக்குவரத்து அமைச்சர் வருத்தம்..!

SMRT Train Service resume
(Photo: Yang Long)

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு மற்றும் வட்ட பாதைகளில் மின் தடை காரணமாக ரயில் சேவை நேற்று மாலை (அக். 14) பாதிக்கப்பட்டது, சில பயணிகள் மீண்டும் ரயில்நிலையத்திற்குச் செல்ல ரயில் தடங்களில் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

இதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர வேறு வழிகளைக் தேடி விரைந்து சென்றதால் பேருந்து நிறுத்தங்கள் நிரம்பியிருந்தன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று தொடர்பான விதிகளை பலமுறை மீறிய பெண்ணுக்கு S$4,000 அபராதம்..!

இந்நிலையில், வட்டப் பாதையில் நேற்று இரவு 8.40 மணிக்கும், அதே போல வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்குப் பாதைகளில் இரவு 10.30 மணிக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கின.

முதலில், SMRT ட்விட்டரில் இரவு 7.15 மணியளவில், இந்த தடை குறித்து எச்சரிக்கை செய்தது, உட்லேண்ட்ஸ் மற்றும் ஜுராங் ஈஸ்ட் MRT நிலையத்திற்கு இடையில் வடக்கு-தெற்கு பாதையில் 25 மணிநேர பயண நேரத்தை சேர்த்துக்கொள்ளும்படி பயணிகளுக்கு ஆலோசனை கூறியது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து அமைச்சர் வருத்தம்

இந்த ரயில் சேவை தடை மற்றும் அதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளுக்கும் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) வருத்தம் தெரிவித்துள்ளார்.

தடை ஒருபுறம் ஏற்பட்டு இருந்தாலும், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில், SMRT ஊழியர்கள் சுமார் 400 பேர் பணியில் ஈடுபட்டு, பயணிகளுக்கு வழிகாட்டினர்.

மேலும், சுமார் 115 இலவசப் பேருந்துகள் அச்சமயத்தில் சேவை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் IKEA நிறுவனம் விற்பனை மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு; மாதத்திற்கு S$14,250 வரை சம்பளம் அறிவிப்பு..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…