சிங்கப்பூரில் கிருமித்தொற்று தொடர்பான விதிகளை பலமுறை மீறிய பெண்ணுக்கு S$4,000 அபராதம்..!

work pass holder forged documents extend stay
(PHOTO: Today)

சிங்கப்பூரில் அதிரடித் திட்டத்தின்போது, COVID-19 விதிகளை பலமுறை மீறி ஒன்று கூடியவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறிய பெண்ணுக்கு S$4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துவான் சிட்டி ஆயிஷா துவான் அப் ரஹ்மான் (Tuan Siti Aishah Tuan Ab Rahman) என்ற 20 வயது பெண்ணுக்கு இன்று புதன்கிழமை (அக். 14) நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் IKEA நிறுவனம் விற்பனை மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு; மாதத்திற்கு S$14,250 வரை சம்பளம் அறிவிப்பு..!!

அதே போல மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 8ஆம் தேதி இரவு பெடோக்கில் உள்ள ஒரு வெற்றுத்தளத்துக்கு மற்ற நான்கு பேர் கொண்ட சந்திப்புக்கு, சிட்டி தன்னுடைய ஒரு நண்பரால் அழைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அந்த நேரத்தில், சர்க்யூட் பிரேக்கர் என்னும் அதிரடி திட்டம் நடப்பில் இருந்தது, அச்சமயம் உரிய காரணங்கள் இன்றி மற்றவர்களை சந்திப்பதை தடை செய்யப்பட்டு இருந்தது.

மேலும் பிளாக் 408, பெடோக் நார்த் அவென்யூ 2இல் உள்ள வெற்றுத் தளத்தில் ஐந்து பேர் ஒன்றுகூடியுள்ளனர், பின்னர் அங்கு அவர்கள் அரட்டை அடித்து பாடிக்கொண்டிருந்ததாக குடியிருப்பாளர் ஒருவர் அதிகாலை 4.23 மணியளவில், காவல்துறையிடம் புகார் செய்தார்.

அங்கு காவல்துறை அதிகாரி வந்தபோது, ​​அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருப்பதையும், சத்தமாக சிரிப்பதையும் கண்டார். பின்னர் அவர்கள் தங்களுடைய விதி மீறல்களை ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர் அதற்கு முன் இரண்டு முறை இந்த COVID-19 தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளை மீறியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 ஒழுங்குமுறையை மீறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை, S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியமாக S$1,300 வழங்கப்பட வேண்டும் – எதிர்கட்சி தலைவர்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…