சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியமாக S$1,300 வழங்கப்பட வேண்டும் – எதிர்கட்சி தலைவர்.!

Pritam Singh S$1,300 minimum wage
Pic: Mothership.sg

சிங்கப்பூரில் குறைந்த சம்பள ஊழியர்களின் வருமானத்தை உயர்த்துவது பற்றி ஆராய்வதற்காக மனிதவள அமைச்சகம் மற்றும் தேசிய முதலாளிகள் சம்மேளனம், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவை இணைந்து முத்தரப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த பணிக்குழுவில், படிப்படியாக உயரும் சம்பள முறையை மேலும் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எஃகு தூண் சரிந்து மேலே விழுந்ததில், இந்தியாவை சேர்ந்த ஆடவர் உயிரிழப்பு..!

இந்நிலையில், சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான பிரித்தம் சிங் சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக S$1,300 வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைந்தபட்ச சம்பளமாக S$1,300 வழங்குவது, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் என்றும், இன்றைய பொருளியல் சூழலில் இது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் அரசின் குறைந்தபட்ச ஊதிய அணுகுமுறையில் உள்ள சில அம்சங்களை பிரித்தம் சிங் வரவேற்றார்.

மேலும், குறைந்தபட்ச ஊதியம் தொடர்புடைய அரசாங்கத்தின் துறைவாரியான அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்டகாலமாகும் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 வெளிநாட்டவர்கள் பிடிபட்டனர்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…