சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 வெளிநாட்டவர்கள் பிடிபட்டனர்.!

unlawful entry Indonesian men charged
Indonesian men charged

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நான்கு இந்தோனேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) செவ்வாய்க்கிழமை (அக். 13) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், கடலோர காவல்படை அதன் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் முதன்முதலில் துவாஸ் மீட்கப்பட்ட நிலத்தில் அவர்களை அடையாளம் கண்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படுவதற்கு முன்னர் வீசப்பட்ட 233 “Swab” மாதிரிகள்..!

அடையாள எண் இல்லாத படகில் இருந்து துவாஸ் மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில் உள்ள நீரில் குதித்து, கரையை நோக்கி நீந்தி செல்வதை அதிகாரிகள் கண்டதாக தெரிவித்தனர்.

கடலோர காவல்படை, ஜுராங் காவல் பிரிவு, கூர்க்கா படை, சிறப்பு மற்றும் முகப்பு குழு ஆளில்லா வான்வழி வாகனப் பிரிவு அதிகாரிகள் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்த உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒரு தங்கும் விடுதியில் தொற்று இல்லை – MOH..!

நான்கு பேரும் அக்டோபர் 10ம் தேதி சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதச் சிறைத் தண்டனையும், குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் (ICA) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு கிருமித்தொற்றுக்கு ஒருவர் மரணம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…