சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு கிருமித்தொற்றுக்கு ஒருவர் மரணம்..!

Singapore COVID-19 death
(Photo: SGH)

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு, COVID-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது கடைசியாக இந்த கிருமித்தொற்று தொடர்பான மரணம் ஜூலை 14 அன்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மலேசியாவின் குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

இதில் சிங்கப்பூரில் 57,960 சம்பவமாக பதிவு செய்யப்பட்ட, 64 வயதான ஆடவர் உயிரிழந்துள்ளார். நிரந்தரவாசியான அவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்துள்ளதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

அவருக்கு அக்டோபர் 4ஆம் தேதி COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், செப்டம்பர் 30 அன்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றின.

அவர் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்தியாவில் பணிபுரிந்து, செப்டம்பர் 23 அன்று சிங்கப்பூர் திரும்பினார் என்று MOH தெரிவித்துள்ளது. அவர் சிங்கப்பூர் வந்தஉடனே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டார்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருடன் மீண்டும் பயணத்தை தொடங்க மேலும் ஒரு நாடு இணக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…