சிங்கப்பூருடன் மீண்டும் பயணத்தை தொடங்க மேலும் ஒரு நாடு இணக்கம்..!

(PHOTO: AFF/ Rosalna Rahman)

சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அத்தியாவசிய வர்த்தக மற்றும் அதிகாரபூர்வ பயணத்திற்காக, Reciprocal green lane (RGL) என்னும் பரஸ்பர பயணத்திற்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

RGL பயணத்திற்கான விண்ணப்பங்கள் அக். 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், அதன் பிறகு பயணம் விரைவில் தொடங்கும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) இன்று திங்கள்கிழமை (அக். 12) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியச் சமூக மக்களுக்காக சிண்டாவின் வேலைவாய்ப்பு..!

சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகியவை பரஸ்பர பயணத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஆகஸ்ட் 25 அன்று MFA கூறியிருந்தது, இதனை அடுத்து இந்த ஒப்பந்தம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி (Retno Marsudi) கடந்த வாரம் CNAவிடம் ஒரு பிரத்யேக பேட்டியில் இரு நாடுகளும் இந்த பயணத்திற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வருகைக்கு வசதியாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் எம்.டி.எம் மார்சுடி ஆகியோர் சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான சிறந்த மற்றும் நீண்டகால உறவுகளை, தொலைபேசி உரையாடலில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக MFA திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய குடிமக்கள், சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு இந்த பயணம் மீண்டும் தொடங்கப்படும் MFA தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் நடைமுறையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், இந்த அத்தியாவசிய பயணங்களிலும் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க : காணாமல் போன செல்லப் பறவை.. வெகுமதி தருவதாக பதிவு…11 நாட்களுக்குப் பிறகு உரிமையாளருடன் மீண்டும் இணைந்தது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…