சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படுவதற்கு முன்னர் வீசப்பட்ட 233 “Swab” மாதிரிகள்..!

COVID-19 swab samples accidentally discarded
COVID-19 swab samples accidentally discarded (PHOTO: Reuters)

COVID-19 சோதனைக்கான 233 Swab மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதற்கு முன்னர் தற்செயலாக தூக்கியெறியப்பட்டுள்ளது. இது குறைபாடுகள் காரணமாக தவறுதலாக வீசப்பட்டதாக ஒரு தனியார் ஆய்வகம் நேற்று (அக். 12) தெரிவித்துள்ளது.

இதில் Quest ஆய்வகம், Swab-and-Send-Home programme திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் முழுவதும் உள்ள கிளினிக்குகளிலிருந்து மாதிரிகளை சேகரித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒரு தங்கும் விடுதியில் தொற்று இல்லை – MOH..!

இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான மாதிரியின் சோதனை முடிவுகளுக்காக கிளினிக்குகள் ஆய்வகத்தைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியபோது, இந்த பிரச்சினை ஆய்வகத்தின் கவனத்திற்கு வந்தததாக அது கூறியுள்ளது.

மாதிரிகள் தவறுதலாக வீசப்பட்டது குறித்து, அக்டோபர் 9ம் தேதி சுகாதார அமைச்சகத்திற்கு (MOH) Quest ஆய்வகம் தகவல் கொடுத்ததாக அமைச்சகம் தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவற்றை தவிர வேறு எந்த மாதிரிகளும் பாதிக்கப்படவில்லை என்பதை சரிபார்த்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 102 பாதிக்கப்பட்ட நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர், அனைத்து சோதனைகளும் எதிர்மறை முடிவுகளை பெற்றுள்ளன என்று Quest ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தீவிரமான எடுத்துள்ளதாக MOH கூறியுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட கிளினிக்குகளுக்கு தகவல் தெரிவிப்பதற்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தொடர்புகொள்வதற்கும் ஆய்வகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் அது கூறியுள்ளது.

இது குறித்து விசாரித்து வருவதாகவும், மேலும் இதுபோன்ற குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் MOH தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணையில் ஏதேனும் விதிமுறைகளை மீறுவது தெரியவந்தால் ஆய்வகத்திற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ஆய்வகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது, இனி இதுபோன்ற தவறுகள் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு கிருமித்தொற்றுக்கு ஒருவர் மரணம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…