சிங்கப்பூரில் மேலும் ஒரு தங்கும் விடுதியில் தொற்று இல்லை – MOH..!

COVID-19 infection discharged
(Photo: Reuters)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 23 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் 57,728 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு கிருமித்தொற்றுக்கு ஒருவர் மரணம்..!

தற்போது 48 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH தெரிவித்துள்ளது.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர் என்றும், யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும், 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அல்லது மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, நோய்த்தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார், அவரையும் சேர்த்து மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வார தனிமை காலங்களில் (28 நாட்கள்), 9 சுங்கே கடுட் அவென்யூவில் உள்ள தங்கும் விடுதியில் மேலும் எந்த சம்பவங்களும் கண்டறியப்படவில்லை என்று MOH கூறியுள்ளது. அதனால், தற்போது இந்த குழுமத்தில் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சம்பவம், 1 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 12 இல் உள்ள Tuas South Dormitory விடுதியுடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 37 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருடன் மீண்டும் பயணத்தை தொடங்க மேலும் ஒரு நாடு இணக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…