சிங்கப்பூரில் எஃகு தூண் சரிந்து மேலே விழுந்ததில், இந்தியாவை சேர்ந்த ஆடவர் உயிரிழப்பு..!

Indian Dies Tuas industrial
(Photo: Google Street view)

துவாஸில் உள்ள ஒரு தொழில்துறை வட்டாரத்தில் எஃகு தூண் சரிந்து மேலே விழுந்ததில், இந்தியாவைச் சேர்ந்த 39 வயது ஆடவர் கடத்த ஞாயிற்றுக்கிழமை (அக். 11) உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் (MOM) தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 11, அன்று 40 துவாஸ் வெஸ்ட் ரோட்டில் ஒரு அபாயகரமான வேலையிட சம்பவம் நிகழ்ந்தது என்றும், அவர் 39 வயதான இந்திய நாட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து இந்த 3வது வாரம் தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!

லாரியில் எஃகு தூண்களை பாதுகாக்க பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, அவர் மீது அது விழுந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணியளவில் இந்த விபத்து தொடர்பான வழக்கு குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர், அந்த இடத்தில் அசைவில்லாமல் கிடந்தார் என்றும், மேலும் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார் என்றும் துணை மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

MOMஇன் படி, Hai Leck இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் அந்த ஆடவர் பணிபுரிந்து வந்தார்.

மனிதவள அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது, மேலும் சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் விநியோகம் செய்யும் பணிகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது SBS பேருந்து மோதல்; ஓட்டுநர் இடைநீக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…