சிங்கப்பூரில் IKEA நிறுவனம் விற்பனை மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு; மாதத்திற்கு S$14,250 வரை சம்பளம் அறிவிப்பு..!!

Singapore IKEA job hiring
IKEA's selling manager job position offering S$9,150 to S$14,250 per month salary. (Photo Credit : Mothership)

சிங்கப்பூரில் உள்ளூர் வேலை தேடுபவர்களை ஈர்ப்பதற்காக ஸ்வீடிஷ் நாட்டு பர்னிச்சர் (Furniture) நிறுவனமான IKEA புதிய ஆட்சேர்ப்பு விளம்பரம் ஒன்றை அரசாங்க வலைத்தளமான MyCareersFutureஇல் பதிவுசெய்துள்ளது.

அந்த விளம்பர பதிவில் விற்பனை மேலாளர் பதவிக்கு ஆள்சேர்ப்பதாகவும், மாதத்திற்கு அதிகபட்சமாக S$14,250 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit : MotherShip

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியமாக S$1,300 வழங்கப்பட வேண்டும் – எதிர்கட்சி தலைவர்.!

முன்னதாக, அதே விளம்பர பதிவில் சம்பள வரம்பை மாதத்திற்கு S$22,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

ஆனால், IKEA தென்கிழக்கு ஆசியாவின் தகவல்தொடர்புத் துறையின் தலைவர் Corinna Schuler அவர்கள் முன்னதாக அறிவிக்கப்பட்ட சம்பள வரம்பு தவறானது என்று தெரிவித்தார்.

மேலும், நாங்கள் எங்கள் வேலை பட்டியலை சரிசெய்துள்ளோம் என்றும், குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்பதாக அவர் கூறினார்.

அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

IKEAவில் அதிக ஊதியம், பெறும் வேலைகள் பொறுப்பு மற்றும் வேலை அனுபவங்கள் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 143 விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது, மேலும் அக்டோபர் 25 அன்று விண்ணப்பம் பதிவுசெய்தல் நிறைவடைகிறது.

அதிக ஊதியம் பெறும் வேலையைத் தவிர, IKEA அதே MyCareersFuture என்ற இணையதளத்தில் அதிகமான பிற வேலை வாய்ப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் IKEA தனது புதிய விற்பனை நிலையத்திற்கு 200 ஊழியர்களை நியமிக்கவுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 14 புதன்கிழமை முதல் https://www.ikea.com/sg/en/stores/jurong/ என்ற வலைத்தளம் வழியாக விண்ணப்பங்களை பதிவுசெய்யலாம்.

மேலும், தங்கள் விண்ணப்பத்தை torecruitment.jurong@ikano.asia என்ற முகவரிக்கும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எஃகு தூண் சரிந்து மேலே விழுந்ததில், இந்தியாவை சேர்ந்த ஆடவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…