சிங்கப்பூரில் சில பகுதிகளில் மின்சாரத் தடை காரணமாக ரயில் சேவை இல்லை: SMRT

No train service SMRT
(Photo: Yang Long)

சிங்கப்பூரில் இன்று மாலை (அக். 14) வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு மற்றும் வட்ட பாதைகளில், மின்சாரத் தடையினால் ரயில் சேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர வேறு வழிகளைக் தேடி விரைந்து செல்வதால் பேருந்து நிறுத்தங்கள் நிரம்பியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று தொடர்பான விதிகளை பலமுறை மீறிய பெண்ணுக்கு S$4,000 அபராதம்..!

முதலில் SMRT ட்விட்டரில் இரவு 7.15 மணியளவில், இந்த தடை குறித்து எச்சரிக்கை செய்தது, உட்லேண்ட்ஸ் மற்றும் ஜுராங் ஈஸ்ட் MRT நிலையத்திற்கு இடையில் வடக்கு-தெற்கு பாதையில் 25 மணிநேர பயண நேரத்தை சேர்த்துக்கொள்ளும்படி பயணிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, கிழக்கு-மேற்கு பாதையில் குயின்ஸ்டவுன் மற்றும் துவாஸ் இணைப்பு இடையே சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜுராங் கிழக்கு MRT நிலையத்தை பயணிகள் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இரவு 8.15 மணியளவில், வட்ட பாதையில் செரங்கூன் மற்றும் ஹார்பர்ஃபிரண்ட் இடையே ரயில் சேவை இல்லை என்று SMRT தெரிவித்தது. இந்த பாதையில் உள்ள சேவைகள் படிப்படியாக மீண்டுவருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் மின் தடையால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பேஸ்புக் பதிவில் இரவு 8.45 மணியளவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் IKEA நிறுவனம் விற்பனை மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு; மாதத்திற்கு S$14,250 வரை சம்பளம் அறிவிப்பு..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…