வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சியகம் – சிங்கப்பூரில் நேற்று திறப்பு

File Photo: Minister Tan See Leng

சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் பங்களித்து வருகின்றனர்.அதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது.திறப்பு விழாவில் மனித வள அமைச்சர் Tan See Leng கலந்து கொண்டார்.சிங்கப்பூரர்கள் ஒருங்கிணைந்து வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்புக்கும்,முயற்சிகளுக்கும் தகுந்த அங்கீகாரத்தை கொடுப்பர் என்று கூறினார்.

Covid-19 வைரஸ் பெருந்தொற்றின் போது வெளிநாட்டு தொழிலாளர்களிடம் காணப்பட்ட மீள்திறனைப் பாராட்டி ,மரியாதை செலுத்துவதே இந்த காட்சியகத்தின் இலக்கு என்று அமைச்சர் Tan கூறினார்.Geylang Bahru-வில் உள்ள நம்பிக்கை,பராமரிப்பு,ஈடுபாட்டுக் குழுவின் தலைமையகத்தில் புதிய காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.

காட்சியகம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.150-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.முதல் பிரிவில் தனிப்பட்ட தொழிலாளர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய கதைகளும் காட்சியகத்தின் பார்வையாளர்களை வரவேற்கின்றன.

இரண்டாவது பிரிவு,வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் பெருந்தொற்று தீவிரமாகப் பரவியது.அந்த நெருக்கடியான நிலையையும்,கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ ஊழியர்கள் எவ்வாறு விரைந்தனர் என்பதையும் காட்சியகத்தின் இரண்டாவது பிரிவு காட்டுகிறது.

அதிக மீள்திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர் அணியை உருவாக்க மனிதவள அமைச்சகம் கொண்டுள்ள திட்டம் குறித்து மூன்றாவது பிரிவு விளக்குகிறது.இந்தத் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்த மேற்கொள்ளப் படும் முயற்சிகளைப் பற்றி நான்காவது பிரிவு புலப்படுத்துகிறது.

காட்சிக்கூடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை.அடுத்த மாதத்திலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களும் காட்சிக்கூடத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்படும்.