சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி – “PASS”காக அதிகாரிக்கு கட்டணமின்றி பாலியல் சேவை

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

சிங்கப்பூரில் தங்கி வேலை செய்ய விரும்பிய பாலியல் சேவை செய்யும் தொழிலாளி ஒருவர், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரியிடம் பணம் வாங்காமல் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, சட்டப்பூர்வமாக நாட்டில் தங்குவதற்கு சிறப்பு அனுமதிச் சீட்டைப் (Special Pass) பெறுவதற்கு அதிகாரி உதவுவார் என்ற நம்பிக்கையில் பாலியல் சேவை வழங்கியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்த ஊழியருக்கு ஒமைக்ரான் ?

அவர் அதிக காலம் சிங்கப்பூரில் தங்கியதற்காக கைது செய்யப்பட்டபோது அந்த அதிகாரியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினார், பின்னர் அந்த பெண் சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக தங்கியிருப்பதை உறுதிசெய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அந்த பெண் அவரது சிறப்பு அனுமதி அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக, அதிகாரிக்குத் தொடர்ந்து பணம் கொடுத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த லியாங் கிங்லானுக்கு (38) நேற்று (டிசம்பர் 17) 25 வாரச் சிறைத் தண்டனையும் S$8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், ஊழல் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும், கட்டண பாலியல் சேவைகளை வழங்க மூன்று இணையதளங்களைப் பயன்படுத்தியதற்காக ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் விசாரணைக்கு முந்தைய ஏற்பாட்டில் அதிகாரி நீதிமன்றத்திற்குத் திரும்ப உள்ளார். அவர் லியாங் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி இந்த பகுதிகளுக்கு தனிமை இல்லாமல் செல்லலாம்!