லாரியில் பின்னால் பயணித்த வெளிநாட்டு ஊழியருக்கு கடும் காயம் – வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் மீண்டும் நீதிமன்றத்தில்..

வெளிநாட்டு ஊழிய

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் லாரியின் பின்னால் பயணித்தபோது கடுமையாக காயத்திற்கு உள்ளானார்.

இதனை அடுத்து, 34 வயதான திரு.குருசாமி முத்து ராஜா என்ற அந்த ஊழியருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அவர் வேலைக்கு தகுதியற்றவர் எனக் கண்டறிந்த கட்டுமான நிறுவனம், அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியது.

பணிநீக்கம் செய்யப்பட்ட குருசாமியால் இங்கு நிரந்தர வேலையை தேடிக்கொள்ள முடியவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று இந்த விபத்து நடந்தது, அப்போது திரு குருசாமி ஃபுல் ஹவுஸ் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

விபத்துக்குப் பிறகு, மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்ட அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவரின் குடும்பத்தை திரு குருசாமி மட்டும் தான் சம்பாரித்து காப்பாற்றி வந்தார். இப்போது வரை காயங்களுக்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, அவர் தனது முன்னாள் முதலாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார்.

ஆனால், 2022 நவம்பர் முதல் 2023 நவம்பர் வரை போதுமான வழக்கு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாத காரணத்தால் இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 2 அன்று தானாகவே நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் திரு குருசாமி, மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என 2023 டிசம்பரில் விண்ணப்பித்தார்.

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கையை மீண்டும் தொடங்க நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.