சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர் கைது!

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

ISIS குழுவிற்கு ஆதரவு அளித்தது விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, 33 வயதான மலேசியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

அதனை அடுத்து, சிங்கப்பூரில் கிளீனராக பணிபுரிந்து வந்த முகமத் ஃபிர்தவுஸ் கமல் இன்ட்சாம் (Mohd Firdaus Kamal Intdzam) என்ற அந்த ஊழியரின் வேலை அனுமதி அட்டை (work pass) ரத்து செய்யப்பட்டது.

இன உணர்வை தூண்டும் விதத்தில் தகவல்கள் அனுப்பிய கட்டுமான ஊழியருக்கு சிறை

மேலும், அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முடித்த உள்நாட்டு பாதுகாப்புத் துறை (ISD), பின்னர் அவரை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதாக இன்றைய (பிப்.9) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் குறித்து மலேசிய சிறப்புக் கிளையுடன் நெருக்கமாகப் பணியாற்றியது.

அதனை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த ஊழியரை மலேசிய சிறப்புக் கிளையிடம் ஒப்படைத்தது.

அவரது மனைவி ருகாய்யா ராம்லியும் (சிங்கப்பூரர்) அந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சமய ஆசிரியரான மனைவிக்கு, சமய வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. மேலும், அவருக்கு சமய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

2016ஆம் ஆண்டில், இணையத்தில் ISIS பிரச்சாரத்தை கண்ட பின்னர் ஃபிர்தவுஸ் அந்த தீவிர சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதாக ISD கூறியுள்ளது.

“சிங்கப்பூர் to மதுரை” செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி