கட்டிடத்தின் விளிம்பில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் – தடுமாறி கீழே விழுந்து மரணம்

Singapore dormitory rent
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூர்: வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நான்காம் மாடியில் இருந்து விழுந்ததில் 37 வயதான வெளிநாட்டு ஊழியர் இறந்தார்.

பெடோக்கில் உள்ள காண்டோமினியம் பிளாக்கில் நடந்த சம்பவத்தில் கடந்த வியாழன் (ஜனவரி 12) அன்று அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

சிறப்பு திறன் கொண்ட COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படுமா? – MOH விளக்கம்

இந்தச் சம்பவம் அன்று பிற்பகல் 3.50 மணியளவில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இறந்த ஊழியர், மியான்மர் நாட்டவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் சக ஊழியருடன் தொங்குமேடையில் இணைந்து வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்போது, இருவரும் சுவரின் கைக்கு எட்டாத பகுதிகளுக்கு வண்ணம் தீட்டுவதற்காக தொங்குமேடைலிருந்து வெளியேறினர், அப்போது கான்கிரீட் விளிம்பு ஓரத்தில் நின்ற அவர் தடுமாறி விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.