வெளிநாட்டு ஊழியர் தீ விபத்தில் மரணம்! – நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் அறிக்கை!

summit_gas_systems_fire

சிங்கப்பூரில் பணியிடத்தில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சுமார் 270,000 வெள்ளி அபராதமாக செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட பாதுகாப்பு,சுகாதாரச் சட்டத்தின்படி கடந்த நவம்பர் மாதம் நான்கு தீர்ப்புகள் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

நான்கு சூழலிலும் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்புக் குறித்த கவலை தரும் அம்சங்கள் காணப்பட்டதாக மனிதவள அமைச்சகம் கூறியது.வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு பிழைக்க வரும் பல வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் ஊழியர்களின் குடும்பத்திற்கு நிம்மதி உணர்வு நிலைக்கும்.

சீனாவைச் சேர்ந்த ஊழியர் Summit Gas Systems நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, எரிவாயுக் கலன் தவறிவிழுந்து ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தார்.

மனிதவள அமைச்சகம் நடத்திய சோதனையில் ,நிறுவனம் முறையாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரிய வந்தது.