பொடுபோக்கான மருத்துவத்தால் உயிரிழந்த தமிழக ஊழியர்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவருக்கு அபராதம்!!!

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

தம்முடைய அலட்சியமான செயலால் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய மருத்துவர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நோயாளிக்கு சிறுநீரகக் குறைபாடு இருக்கும் பட்சத்தில் தேவையான சோதனைகளைச் செய்யாமல், தோல் அழற்சிக்கு ஒரு குறிப்பிட்ட மருந்தை வெளிநாட்டு ஊழியருக்கு வழங்கியுள்ளார்.

சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!

இதனால் ஊழியர் ​​மிகவும் தீவிரமான பக்கவிளைவுகளுக்கு ஆளானார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 77 வயதான ஹரிதாஸ் ராம்தாஸ் என்ற மருத்துவர் அலட்சியமான செயலால் ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் நேற்று (பிப்ரவரி 10) S$1,500 அபராதம் விதிக்கப்பட்டது.

தனது நோயாளியான சவரிமுத்து அருள் சேவியர் சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்திய நாட்டை சேர்ந்த அவர், சிகிச்சைக்குப் பிறகு ஊடுருவும் பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார்.

ஹரிதாஸ் ஒரு பொது மருத்துவர் (GP), இவர் சேவியரின் மரணத்திற்கு காரணம் என முதலில் குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் பின்னர் அவரின் வழக்கறிஞர் வாதத்தால் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது.

சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!