சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி

foreign Worker dies steel beam hits

இரும்பு உத்தரம் (steel beam) மாற்றியமைக்கப்பட்ட பணியின்போது எதிர்பாராத விதமாக அது கவிழ்ந்து தலையில் தாக்கியதில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, பங்களாதேஷ் ஊழியருக்கு மரணத்தை ஏற்படுத்தியதுக்காக 49 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் எப்படி தொடர்புடையவர்கள் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

தேக்காவில் திருட்டு… ART கருவிகளைத் திருடியதாக பிடிபட்ட இருவர்!

சிங்கப்பூரில் ஒரே நாளில் (ஏப்ரல் 27) நடந்த இரண்டு அபாயகரமான பணியிட விபத்துகளில் இதுவும் ஒன்றாகும், இது இந்த மாதத்தில் ஏழாவது பணியிட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திலேயே பலி

42 வயதான அந்த ஊழியர், பூன் லேயில் உள்ள 7A Neythal சாலையில் இரும்பு உத்தரங்களை ஒன்று சேர்த்து போக்குவரத்திற்கும் தயார்படுத்திக் கொண்டிருந்தார் என்று MOM கூறியுள்ளது.

அந்த இரும்பு திடீரென்று அவரை நோக்கி கவிழ்ந்து தலையில் தாக்கியதாக MOM தெரிவித்துள்ளது.

தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

அன்று மதியம் 1.55 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், அங்கு வந்து பார்த்தபோது ஊழியர் அசைவில்லாமல் கீழே கிடந்ததை கண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.

அவர், Ace Surface Treatment நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் MOM கூறியுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

கட்டுமானத் துறை Work permit ஊழியர்கள் தான் டாப் – அதிகரிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து