தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Photo: Shin Min Daily News

சிங்கப்பூர்: 15 யுஷுன் இண்டஸ்ட்ரியல் ஸ்ட்ரீட் 1க்கு அருகில் இன்று (ஏப்ரல் 27) காலை பிரைம் மூவர் கனரக வாகனம் இந்திய ஊழியர் ஒருவர் மீது ஏறியதில் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

39 வயதான சண்முகம் ஜோதி என்ற அந்த ஓட்டுநர், கனரக வாகனத்தை நிறுத்தி விட்டு கட்டுப்பாட்டு பிரேக் போட மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Breaking: சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!

பின்னர் அவர் வாகனத்துக்கு திரும்பி சென்றதாக நம்பப்படும் வேளையில், அவர் மீது வாகனம் முன்னோக்கி நகர்ந்து அவரை நசுக்கியதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இறந்தவர், இந்திய நாட்டை சேர்ந்த தமிழக ஊழியர் என கூறப்படுகிறது, இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக இங்குள்ள தளவாட நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.

‘ஜோதி அன்று காலை அந்த இடத்தில் சரக்குகளை எடுத்துக்கொண்டிருந்தார்’ என்று நிறுவனத்தின் மேலாளர் கூறியுள்ளார். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஊழியரின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு உதவிகளை வழங்கும் பணியில் நிறுவனம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

அன்று காலை 8.09 மணியளவில் இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

குழாய் வழியே தலைகீழாகத் தொங்கிய ஆடவர்… மலை பாம்பு என தெறித்த மக்கள் – மடக்கி தூக்கிய போலீஸ் (வீடியோ)