சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!

Nagaenthran Dharmalingam executed i
Nagaenthran Dharmalingam executed / M Ravi/FB & Fiona Tan

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கம் இன்று (ஏப். 27, 2022) தூக்கிலிடப்பட்டார்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை நாகேந்திரனின் சகோதரர் மூலம் உறுதி செய்ததாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நாகேந்திரனின் சகோதரியும் இதனை BBCயிடம் உறுதிப்படுத்தினார்.

Junction 10 மாலில் லிப்டில் சிக்கிய 3 பேர்.. மின்சாரம் இல்லை… திக் திக் நிமிடம் – இறுதியில் நடந்தது என்ன?

தற்போது சிங்கப்பூர், 38 சின் மிங் டிரைவில் அவருக்காக பிராத்தனை கூட்டம் நடைபெறுகிறது. அதாவது இன்று ஏப்., 27 மதியம் 1 மணிக்கு துவங்கி, மாலை 4 மணிக்கு அது முடிவடையும்.

நாகேந்திரன் தர்மலிங்கம் 34 வயதுமிக்கவர், இவர் கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் எடையுள்ள ஹெராயின் எனும் போதை பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் முதன்முதலில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது,

இந்த மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடுகள் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன் பின்னர் அவருக்காக கோரப்பட்ட அனைத்து கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, இறுதியாக அவர் தூக்கிலிடப்பட்டார்.

இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நாம் முன்னர் பதிவிட்டுள்ளோம்: படிக்க 

சிங்கப்பூர் MRT ரயிலில் சிக்கி தவித்த 50 பயணிகள் – என்ன நடந்தது?