Junction 10 மாலில் லிப்டில் சிக்கிய 3 பேர்.. மின்சாரம் இல்லை… திக் திக் நிமிடம் – இறுதியில் நடந்தது என்ன?

junction-10 lift trap
SCDF/Facebook

Junction 10 மாலில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப். 26) 3 பேர் லிப்டில் சிக்கிக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) இது பற்றி Facebook பதிவில் கூறியதாவது; ஏப். 26 மாலை சுமார் 5:10 மணியளவில் No. 1 உட்லண்ட்ஸ் சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

சிங்கப்பூர் MRT ரயிலில் சிக்கி தவித்த 50 பயணிகள் – என்ன நடந்தது?

இதில் இரண்டாவது மற்றும் நான்காவது தளத்திற்கு இடையில் லிப்ட் சிக்கிக் கொண்டதாகவும், மூன்று பேர் அதன் உள்ளே சிக்கியிருந்ததாகவும் SCDF கூறியுள்ளது.

லிப்டில் மின்சாரம் இல்லை. இதனை அடுத்து, மீட்புப் பணிக்காக பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு அமைப்பான DART உதவிக்காக விரைந்து வந்தது.

DART குழு நான்காவது மாடியில் கயிறுகள் கட்டி தனது மீட்பு நடவடிக்கையை செயல்படுத்தியது.

பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, SCDF மருத்துவ குழு மூலம் காயங்களுக்கு மதிப்பிடப்பட்டனர்.

அதனை அடுத்து, அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று SCDF தெரிவித்தது.