சிங்கப்பூரில் வேலைப்பார்த்து வந்த வெளிநாட்டு ஊழியர் மாரடைப்பால் திடீர் மரணம்: கோரிக்கை விடுத்த பெற்றோர்..!

சிங்கப்பூரில் AC இயந்திரம் பழுதுபார்க்கும் 46 வயதான ஹவ் என்ற வெளிநாட்டு ஊழியர் சமீபத்தில் சிங்கப்பூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் உடலை கடைசியாக பார்க்க அவரின் பெற்றோர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வர வேண்டும் என்பதற்காக VTL பேருந்து டிக்கெட்டுகளை மக்கள் விட்டுக்கொடுக்குமாறு அவரது சகோதரி பேஸ்புக் குழுவில் வேண்டுகோள் விடுத்தார்.

சிங்கப்பூரை விட்டு வெளியேறிய வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி ப்ரீபெய்டு சிம் கார்டு பதிவு… 10 பேர் கைது!

“எனக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது, என் சகோதரர் சிங்கப்பூரில் திடீரென இறந்துவிட்டார், என் அம்மா அவரை மூன்று வருடங்களாக பார்க்கவில்லை, இந்நிலையில் கடைசியாக அவரை பார்க்க பெற்றோர் விரும்புகிறார், தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” என்று சகோதரி பேஸ்புக் குழுவில் நெஞ்சை உலுக்கும் விதமாக வேண்டுகோள் விடுத்தார்.

பயணத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாகவும், ஆனால் ஜனவரி 16ஆம் தேதிக்கான VTL பஸ் டிக்கெட்டுகளை வாங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

How’s sister/Facebook

மேலும், நாளை ஜன. 18ம் தேதி காலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று ஹவ்ஸ்-இன் இரங்கல் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

இதனை அடுத்து, பல்வேறு அதிகாரிகளின் உதவியுடன், ஹவ்ஸ் குடும்பம் நேற்று ஜன., 16 அன்று காலை மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட நான்கு VTL பேருந்து டிக்கெட்டுகளை வெற்றிகரமாகப் பெற்றனர்.

சீனப் புத்தாண்டு நெருங்கிவிட்டதால், VTL பேருந்து டிக்கெட்டுகளைப் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இந்த இக்கட்டான சூழலில், சிங்கப்பூருக்கு ஹவ்ஸ் பெற்றோரை அழைத்துச் செல்வதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் ஹவ்ஸ்-இன் மனைவி நன்றி தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 1 அன்று 133 FairPrice கடைகள் தொடர்ந்து செயல்படும்