சிங்கப்பூரை விட்டு வெளியேறிய வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி ப்ரீபெய்டு சிம் கார்டு பதிவு… 10 பேர் கைது!

handphone_shops_sim_cards
Singapore Police Force

சிங்கப்பூரில், ப்ரீபெய்டு சிம் கார்டுகளை முறைகேடாக பதிவு செய்த சந்தேகத்தின்பேரில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடி, உரிமம் இல்லாத கடன் போன்ற குற்றங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவை முறைகேடாக வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆறு முக்கிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு PCR சோதனைக்கான முன்பதிவு அவசியம்

தீவு முழுவதும் ஒன்பது மணி நேர சோதனை நடவடிக்கையில் வர்த்தக விவகாரத் துறை ஈடுபட்டது, அப்போது 17 கைபேசி கடைகளில் அது சோதனைகளை மேற்கொண்டது.

ஆர்ச்சர்ட், கெயிலாங், செராங்கூன், பாசிர் ரிஸ், ஜூரோங் வெஸ்ட், யுஷுன், உட்லண்ட்ஸ், பூன் லே, டெஸ்கர் சாலை, சையத் அல்வி சாலை மற்றும் ரோச்சர் கேணல் சாலை ஆகிய இடங்களில் அந்த கடைகள் அமைந்துள்ளன.

கெய்லாங் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள நான்கு கடைகள் அதில் அடங்கும்.

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 31 மற்றும் 56 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூருக்குள் நுழையாத அல்லது நாட்டை விட்டு வெளியேறிய சந்தேகத்திற்கு இடமான வாடிக்கையாளர்கள் அல்லது வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டுகளை மோசடியாகப் பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், 24 முதல் 68 வயதுக்குட்பட்ட 15 ஆண்களும் ஒன்பது பெண்களும் விசாரணைகளுக்கு உதவுகின்றனர்.

ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்