சிங்கப்பூரில் இந்திய ஊழியருக்கு சிறை விதிப்பு.. பிரம்படி??

foreign worker case singapore take action
Pic: Raj Nadarajan/Today

மது போதையில் சண்டையிட்டு கொண்ட இருவரை விலக்க சென்ற இந்திய ஊழியரின் விரலை கடித்து எடுத்த மற்றொரு இந்திய ஊழியருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியரின் இடது ஆள்காட்டி விரலை வலுக்கட்டாயமாக கடித்து கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” – ஏமாந்துபோன பல ஆயிரம் பேர்

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 40 வயதுமிக்க தங்கராசு ரெங்கசாமிக்கு கடந்த செப். 15 அன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தங்கராசு வேலை மற்றும் வசித்த இடம்

சம்பவத்தின் போது, ​​தங்கராசு குழி தோண்டும் இயந்திரத்தை இயக்கும் நபராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் அவர் காக்கி புக்கிட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசித்து வந்தார்.

மது போதை

இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இரவு தங்கராசு தனது நண்பரான ஊழியர் ராமமூர்த்தி ஆனந்தராஜ் (33) என்பவருடன் சேர்ந்து தங்குமிடத்திற்கு அருகில் உள்ள ஊழியர்கள் ஒன்றுகூடும் பிரபலமான இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தார்.

​​போதையில் இருந்த தங்கராசு சத்தம்போட்டு பேசியுள்ளார், அப்போது அருகில் இருந்த ஆறுமுகம் சங்கர் என்பவர் தங்கராசுவை அமைதியாக இருக்க சொன்னார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆறுமுகம், தங்கராசுவை அறைந்தார்.

தடுக்க வந்த நல்லுள்ளம்

அதனை கண்ட 50 வயதுமிக்க ​​நாகூரான் பாலசுப்ரமணியன் என்ற ஊழியர், வாக்குவாதத்தில் இருந்த இருவரையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

அப்போது, ​​அவரும் அந்த சண்டையில் சிக்கிக் கொள்ள, திரு நாகூரானின் இடது ஆள்காட்டி விரல் கவனக்குறைவாக தங்கராசுவின் வாயில் நுழைந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

விரலின் நுனி பகுதி துண்டிப்பு

இதனை அடுத்து, தங்கராசு அவரின் விரலை வலுக்கட்டாயமாக கடித்ததாகவும், அது திரு நாகூரானை கடுமையாக பாதிக்கும் என்று அறிந்தும் அவர் விரலை விடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவர் விரலை விடுவித்ததும் தன்னுடைய ஆள்காட்டி விரலின் நுனி பகுதி துண்டிக்கப்பட்டதை திரு நாகூரான் அறிந்தார்.

தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, தங்கராசுவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

கோவை, திருச்சியில் சிங்கப்பூருக்கு அதிரடி சலுகை.. கட்டணம் ரூ. 6,500 மட்டுமே – பல்வேறு சிறப்புகளை வழங்கும் Scoot