வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சட்டச்சேவை! – திட்டத்திற்கான நிதியை அரசு வழங்கும்

indian-origin-singapore-jailed
சிங்கப்பூரின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்.சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் இலவசக் சட்டச் சேவைப் பிரிவின் கீழ் செயல்படும் குற்றவியல் சட்ட உதவித் திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் குறைந்த வருமான வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தற்காப்பு வழக்கறிஞர்களை இத்திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கலாம்.மேலும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படும்.இத்திட்டத்துக்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி வழங்கும்.

இந்தாண்டின் இறுதிக்குள் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் நிறுவப்படும்.குற்றச்சாட்டுகளுடன் போராடும் குறைந்த வருமானம் கொண்ட சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் முழுநேர வழக்கறிஞர் சேவை வழங்கப்படும்.
சுமார் 1404 பேருக்கு ஓராண்டில் இத்திட்டம் உதவி வழங்கியுள்ளது.உதவி பெற்றவர்களில் 729 பேருக்கு அவர்களின் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அதிகபட்சமாக $1500 தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி பெறுவர்.